சினிமா செய்திகள்

தனுஷ்

தனுஷ் கொடுத்த அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்

Published On 2022-06-23 14:12 IST   |   Update On 2022-06-23 14:12:00 IST
  • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம்.
  • இப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தது.

தனுஷ் - அனிருத் 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் முதல்பாடலான "தாய் கிழவி" என்ற பாடல் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என ஒரு வீடியோ பதிவின் மூலம் தனுஷ் அறிவித்துள்ளார். அதில், திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் ஜூன் 24 முதல். 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிஎன்எ(தனுஷ் அண்ட் அனிருத்). ஆம், இது ஸ்பெஷல் என்று பதிவிட்டுள்ளார். தனுஷ்-அனிருத் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற முதல் வரி, நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம் மனோரமாவை பார்த்து தாய்க்கிழவி என்று ஆக்ரோஷமாகப் பேசும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News