சினிமா செய்திகள்

தனுஷ்

வாழ்த்து தெரிவித்த தனுஷ்.. வைரலாகும் பதிவு..

Published On 2022-06-06 12:49 IST   |   Update On 2022-06-06 12:49:00 IST
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ரபேல் நடால் மற்றும் காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். வெற்றி பெற்ற பிரபல டென்னிஸ் வீரருக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14-வது வெற்றியாகும். சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரபேல் நடால் - தனுஷ்

இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நாடாலுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதனுடன் ரபேல் நடால் புகைப்படத்தையும் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News