சினிமா செய்திகள்

புளோரா சைனி

null

என்னை தவறாக பயன்படுத்தினார்.. 14 மாதம் சித்ரவதை செய்தார்.. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

Published On 2023-02-02 08:56 IST   |   Update On 2023-02-02 09:03:00 IST
  • கஜேந்திரா, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் புளோரா சைனி.
  • பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா சைனி புகார் தெரிவித்து உள்ளார்.

தமிழில் விஜயகாந்தின் 'கஜேந்திரா' படத்தில் அறிமுகமான புளோரா சைனி தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா புகார் தெரிவித்து உள்ளார்.

 

புளோரா சைனி


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, "நான் 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். இந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது. அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்தினார். கடுமையாக அடித்து காயப்படுத்தினார். எனது போனை பிடுங்கி கொண்டார்.

14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்ரவதை செய்தார். மற்றவர்களிடம் பேசவிடாமல் தடுத்தார். அவரிடம் நரக வேதனையை அனுபவித்தேன். இறுதியில் அந்த தயாரிப்பாளரை விட்டு ஓடிவந்து எனது பெற்றோருடன் சேர்ந்து விட்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

Tags:    

Similar News