வரமொற ஒடச்சிட செட் ஆனவன்.. ரசிகர்களை தொடர்ந்து வைபில் வைத்திருக்கும் ஹுக்கும்
- இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹுக்கும்' பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.