சினிமா செய்திகள்
தொட நெருங்கிட முடியாதே.. ஹுக்கும் பாடல் வீடியோ வெளியானது
- நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றிருந்த 'ஹுக்கும்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்து வருகிறார்கள்.