சினிமா செய்திகள்
அட்லீ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
- அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.