null
ஜெயிலர் வெற்றி.. ரஜினி தேர்வு செய்த காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'ஜெயிலர்' திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'ஜெயிலர்' வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாதிநிதி மாறன் BMW i7 மற்றும் BMW X7 மாடல் காரில் ஒன்றை ரஜினியை தேர்ந்தெடுக்க கூறினார். இதில் BMW X7 மாடல் காரை ரஜினி தேர்ந்தெடுத்தார். இதனை கலாநிதி மாறன், ரஜினிக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.