கமல்ஹாசன்- எச்.வினோத் படத்தின் அப்டேட் எப்போது தெரியுமா?
- திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
- இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து கமலின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கமலின் 233-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புரொமோ டீசர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி இரவு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.