பொங்கலுக்கு கண்டிப்பாக வருகிறோம்.. மீண்டும் உறுதி செய்த லால்சலாம் படக்குழு
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
லால் சலாம் போஸ்டர்
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 'லால் சலாம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக மீண்டும் உறுதி செய்துள்ளது.
As we put the final touches in post-production, we would like to affirm #LalSalaam ? is coming to screens this PONGAL 2024 ☀️
— Lyca Productions (@LycaProductions) November 22, 2023
Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada! In Cinemas ?️ PONGAL 2024 Worldwide ☀️?@rajinikanth @ash_rajinikanth @arrahman… pic.twitter.com/1PPBmW0AUk