சினிமா செய்திகள்
மார்க் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
- நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மார்க் ஆண்டனி போஸ்டர்
இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் நாளை ( செப்டம்பர் 3) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
#MarkAntony Trailer on September 3rd !#MarkAntonyFromSep15#MarkAntonyTrailer pic.twitter.com/YWhLBiLbdV
— Vishal (@VishalKOfficial) September 1, 2023