சினிமா செய்திகள்
வசூலில் தாறுமாறு செய்யும் மார்க் ஆண்டனி
- விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் வசூலை குவித்து வருகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதால் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நாட்களுக்கு பிறகு விஷால் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.