null
நடிகராக அறிமுகமாகும் எடிட்டரின் மகன்
- சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர் செங்களம்.
- ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார்.
"சுந்தர பாண்டியன்", "இது கதிர்வேலன் காதல்" போன்ற திரைப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் பிஜு. வி. டான் பாஸ்கோ. இவர் சமீபத்தில் வெளியான "செங்களம்" வெப் தொடருக்கு எடிட்டிங் செய்து இருந்தார். இந்த வெப் தொடர் பலராலும் பாராட்டப்பட்டது.
இவரது மூத்த மகன் பினு.டி. ஜான் பாஸ்கோ, தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "கோல்மால்" என்ற திரைப்படம் முழுக்க முழுக்க மொரிஷியஸில் படமாக்கப்பட்டது. அதில் அவர் நடித்த பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அதில் முக்கியமாக தமிழ் திரைப்பட துறையில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஆர். பார்த்திபன் இயக்கும் படத்தில் நடித்து இருக்கிறார். படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் வெளிவந்த பிறகு அவர் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத குழந்தை நட்சத்திரமாக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக இயக்குனர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.