சினிமா செய்திகள்
ஜெயிலர் வெற்றி - இயக்குனர் நெல்சனுக்கும் காசோலை கொடுத்த கலாநிதி மாறன்
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
- ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்தார். மேலும் ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் வகையில், அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.