சார்பட்டா பரம்பரை படத்தை விட 100 மடங்கு பயங்கரமா இருக்கும் - 'தங்கலான்' விக்ரம்
- தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
- தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியாகிறது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கும் தங்கலான் படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. தங்கலான் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இன்று வெளியான டீசர் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. டீசர் வெளியீட்டை படக்குழு நிகழ்சியாக நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்த அனுபவம் பற்றி விரிவாக பேசினார். மேலும் சில காட்சிகளை நடித்தும் காண்பித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், "சார்பட்டா பரம்பரை படத்தை பா. ரஞ்சித் எப்படி எடுத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை கேட்டால், இது அதைவிட 100 மடங்கு பயங்கரமா இருக்கும். படப்பிடிப்பின் போது கோவணம் கட்டிக்கிட்டு, காலில் செருப்பு இல்லாம, கடும் வெயில்ல நடிக்கும் போது, அந்த கதாபாத்திரமாகவே மாறிடுவோம்," என்று தெரிவித்தார்.