'பொன்னி நதி' பாடல் விஜய்க்கு மிகவும் பிடிக்கும் - நடிகர் சரத்குமார்
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
பொன்னியின் செல்வன்
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
சரத்குமார்
இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அதில் நடிகர் விஜய்க்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் எந்த பாடல் பிடிக்கும் என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சரத்குமார், " விஜய்க்கு 'பொன்னிநதி' பாடல் மிகவும் பிடிக்கும் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அந்த பாடலை தான் பாடிக் கொண்டிருப்பார்" என்று கூறினார்.
விஜய் நடிக்கும் 'வரிசு' திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது