சினிமா செய்திகள்

ஷாருக்கானுக்கு ஐகான் விருது.. குவியும் வாழ்த்துக்கள்

Published On 2022-11-14 12:15 IST   |   Update On 2022-11-14 12:16:00 IST
  • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.
  • ஷார்ஜா புத்தக கண்காட்சியில் ஷாருக்கானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சினிமா மற்றும் கலச்சார துறையில் சாதித்ததற்காக உலகளாவிய ஐகான் விருது வழங்கப்பட்டது. காட்சி ஊடகத்தின் வழியே எழுத்து, படைப்பாற்றல் துறையில் சாதித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

 

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட ஷாருக்கான் பேசிய தாவது, கதைகள், சொற்கள் அவை சேர்ந்ததுதான் சினிமா. நாங்கள் காட்சிகள் மூலமாகவும், நடனத்தின் மூலமாகவும் மனிதநேயத்தை வளர்க்க நினைக்கிறோம். புத்தகங்கள் நம் வாழ்க்கையின் அங்கங்கள். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அன்பு, அமைதி, கருணை இதில் தான் நாம் சிறந்து விளங்குகிறோம் என்று பேசினார்.

சமீபகாலமாக ஷாருக்கானுக்கு மத்திய கிழக்கு, அமெரிக்கா நாடுகளில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று பிரபல நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News