காலில் விழுந்த ரசிகர்.. கண்கலங்கி கட்டியணைத்த தமன்னா
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
- சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தமன்னாவின் காலில் விழுந்தார். பின்னர் தமன்னாவுக்கு பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகர், தனது கையில் தமன்னாவின் முகத்தை பச்சை குத்தியிருந்ததை காண்பித்தார். ரசிகரின் அன்பை நெகிழ்ந்து பார்த்த தமன்னா, கண்கலங்கி அவரை கட்டியணைத்தார். மேலும் அவர் கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.