'படிப்ப கொடுங்க விக்காதீங்க' வெளியானது வாத்தி பட டீசர்
- தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.
- வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
வாத்தி போஸ்டர்
தனுஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கு வகையில் 'வாத்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் தனுஷின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது.
அதன்படி, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அக்ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.