சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா படத்தின் புதிய பாடல்.. வைரலாகும் வீடியோ..

Published On 2022-07-11 17:25 IST   |   Update On 2022-07-11 17:25:00 IST
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
  • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


லைகர்

இந்நிலையில், இப்படத்தின் அகடி பகடி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அகடி பகடி பாடல் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Full View


Tags:    

Similar News