நிர்வாகிகளுக்கு தன் கைகளினாலேயே உணவு பரிமாறிய விஷால்
- நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், திருச்சியில் விஷால் மக்கள் நல இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்ட விஷால் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விஷால், நிர்வாகிகளுக்கு தன் கைகளினாலே பிரியாணி பரிமாறினார். இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.