விஷ்ணு விஷால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.
- இந்த படத்தின் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.
கட்டா குஸ்தி
'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டா குஸ்தி
'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கட்டா குஸ்தி' திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
My biggest film till date coming in a big way ♥️#GattaKusthi #MattiKusthi in theatres on the 2nd of December, 2022. pic.twitter.com/WHauzHGPJr
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) November 11, 2022