null
'பார்க்கிங்' இயக்குநருடன் இணையும் சிம்பு
- தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர்48' படத்தில் நடித்து வருகிறார்.
- சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.
அதைதொடர்ந்து இவர் 'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வரவேற்பை பெற்றது. அஸ்வத் தற்போது இயக்கி வரும் 'டிராகன்' படம் ரிலீஸ் ஆன பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர்48' படத்தில் நடித்து வருகிறார். கமலுடன் இணைந்து 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிம்புவின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் சிம்பு ரத்தக்கறை இருக்கும் கத்தியை எடுத்து என்ஜினீரியிங் புக் உள்ளே மறைத்து வைத்து இருக்கிறார்.
அதனால் சிம்பு என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.