டிராகன் படத்தின் `மாட்டிகினாரு ஒருத்தரு' பாடல் வெளியானது
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலில் தாண்டியுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலில் தாண்டியது. இன்னும் வரும் நாட்களில் 100 கோடி ரூபாயை திரைப்படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று மட்டும் புக் மை ஷோ தளத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தில் இடம் பெற்ற மாட்டிகினாரு ஒருத்தரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கானா எபிலோ எழுதி பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.