சினிமா செய்திகள்

திரிஷா குறித்த பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு

Published On 2023-11-21 19:45 IST   |   Update On 2023-11-21 19:45:00 IST
  • திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
  • இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

சென்னை:

லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டிப்பாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா புகார் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

Similar News