null
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ரூ.20 லட்சம் வழங்கிய விக்கி- நயன் தம்பதி
- சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன.
- நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம்" என்று நயன்தாரா கூறினார்.
வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுடன் எங்கள் இதயம் இருக்கிறது.
சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 (ரூபா இருபது லட்சம் மட்டும்) வழங்குகிறோம்.
நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த உதவியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.