
இந்த வார ஓடிடி ரிலீஸ் - 24.03.25 முதல் 30.03.25 வரை
- நடிகர் ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- விமல், ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'
பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் 101-வது படமாக 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாகவும், யூடியூபர் ஹரி பாஸ்கர் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா, சிம்பிலி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.
'முபாசா தி லயன் கிங்'
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து உருவாகியுள்ள படம் 'முபாசா தி லயன் கிங்'. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஓம் காளி ஜெய் காளி'
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல், ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த தொடர் நாளை (28-ந் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'மசாகா'
திரிநாத் ராவ் நக்கினா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'மசாகா'. இதில் சந்தீப் கிஷன் மற்றும் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'அகத்தியா'
நடிகர் ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் 1940 காலகட்டத்திலும், தற்போது நடப்பது போலவும் எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் நம் தமிழரின் பாரம்பர்யத்தையும் , தமிழ் மருத்துவத்தை மேன்மை படுத்தும் வகையில் ஹாரர் பின்னணி கதைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'செருப்புகள் ஜாக்கிரதை'
இயக்குனர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'செருப்புகள் ஜாக்கிரதை'. இந்த தொடரை எஸ்.எஸ் குரூப் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இந்த தொடர் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திருப்பங்களுடன் வெகு சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தொடர் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.