சினிமா
அண்ணங்காரன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
அண்ணங்காரன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்காரன்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகாபாரத தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடம் தீ மிதி திருவிழா கடந்த மாதம் 18-ந்தேதி அன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
அதைதொடர்ந்து கடந்த 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை அம்மனுக்கு மஞ்சள், களபம், சந்தனம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் செல்வராஜ், சவுந்தர்ராஜன், கருணாகரன், கோவிந்தராஜ், வெங்கடாசலபதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.