சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவுக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். சாம் கான்ஸ்டாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் டிக்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.
50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை நமன் திவாரி பிரித்தார். ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் டிக்சன் 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்ஜாஸ் சிங் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.