டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கப்போவதில்லை- பென் ஸ்டோக்ஸ்
- எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.
- இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நான் கடினமாக உழைத்து வருகிறேன். மேலும் எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.
சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், எனது முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை எடுத்துக்காட்டியது.
கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமிற்காக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோஸ் [பட்லர்], மோட்டி [மேத்யூ மோட்] மற்றும் அனைத்து அணியினருக்கும் எங்கள் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எனது வாழ்த்துகள்.
என தெரிவித்துள்ளார்.