கிரிக்கெட் (Cricket)
null

நாளை முதல் டி20 போட்டி: விசாகப்பட்டினம் சென்றடைந்த இந்திய வீரர்கள்- வீடியோ

Published On 2023-11-22 13:14 IST   |   Update On 2023-11-22 18:00:00 IST
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
  • ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார்.

விசாகப்பட்டினம்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவில் 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின்னர் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

தற்போது அந்த அணி இந்திய மண்ணில் 5 இருபது ஒவர் போட்டி தொடரில் ஆடுகிறது. ஒருநாள் போட்டி தொடரின் தொடர்ச்சியாக 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (23-ந்தேதி) நடக்கிறது.

உலகக் கோப்பையில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் கடைசி 2 ஆட்டத்தில் அணியோடு இனைந்து கொள்வார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

இரு அணிகள் மோதிய கடைசி 5 இருபது ஓவர் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக உள்ளார். உலகக் கோப்பை யில் ஆடிய டிரெவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித்,ஜோஸ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா , அபோட் ஆகியோர் 20 ஓவர் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், ஆஸ்திரேலியா 10-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா:-

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான்கிஷன், ஜெய்ஷ்வால், ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே, திலக் வர்மா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்தீப்சிங், அவேஷ்கான், முகேஷ்குமார், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்.

ஆஸ்திரேலியா:-

மேத்யூ வேட் (கேப்டன்), டிரெவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், ஸ்டோ னிஸ், டிம் டேவிட், பெகரன் டார்ப், ஜோஸ் இங்லிஸ், தன்வீர் சங்கா, அபோட், நாதன் எல்லிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, மேத்யூ ஷார்ட்.

Tags:    

Similar News