கிரிக்கெட் (Cricket)

நல்ல திட்டங்கள் வகுத்தும் செயல்படுத்த முடியாததால் தோல்வி- உதய் சஹாரன் விளக்கம்

Published On 2024-02-12 15:23 GMT   |   Update On 2024-02-12 15:23 GMT
  • இந்திய அணி, 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
  • அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்தியஅணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் அணியின் வீரர்களை எண்ணி நான் பெருமை அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தேவையற்ற சில ஷாட்களை இறுதிப் போட்டியில் ஆடினோம். இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி திட்டங்களை வகுத்து இருந்தோம்.

ஆனால் எங்களால் சரியான முறையில் செயல்படுத்த முடியவில்லை. இந்ததொடர் முழுவதும் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு உள்ளோம்.

அடுத்து வரும் ஆட்டங்களில் இன்னும் சிறப்பாக விளையாட முயல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News