இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது- கில்லுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்
- நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.
- ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் சுப்மன் கில்லை பாராட்டி வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார்.
ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது என கில் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவரிடம் உள்ள திறமைக்கு அவர் அநியாயம் செய்து வருகிறார். கில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். 20 ரன்கள் அடித்து விட்டு அதன் பிறகு ஒரு தேவையில்லாத ஷாட் அடி ஆட்டமிழந்து விடுகிறார். கடந்த ஆண்டு கில் நன்றாக விளையாடிய போது இந்த தவறை அவர் செய்யவில்லை. ரன் சேர்க்க வேண்டும் என்றால் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும்.
எந்த ஸ்பெஷல் ஷார்ட்டும் ஆடாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தாலே ரன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்திற்கும் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரியாக்ட் தான் செய்ய வேண்டும். தவிர இப்படி தான் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
என்று சல்மான் பட் கூறியுள்ளார்.