மகளிர் டி20 உலக கோப்பை - வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை
- முதலில் ஆடிய வங்காளதேச அணி 126 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 129 ரன்கள் எடுத்து வென்றது.
கேப் டவுன் :
8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கேப் டவுன் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் ரணசிங்கே 3 விக்கெட்டும், அடப்பட்டு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
தொடக்க வீராங்கனை ஹர்ஷிதா மதாவியுடன் நீலாக்ஷி டி சில்வா ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில், இலங்கை 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்ஷிதா மதாவி அரை சதமடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நீலாக்ஷி டி சில்வா 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.