கிரிக்கெட் (Cricket)

நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ்: அலட்டிக் கொள்ளாத ஆஸ்திரேலியர்கள்- வைரல் வீடியோ

Published On 2023-11-22 11:22 GMT   |   Update On 2023-11-22 11:22 GMT
  • ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
  • மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்தார்.

13-வது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் இருந்து எந்தவித வரவேற்பும் இன்றி நடந்து சென்றார். உலகக் கோப்பையை வென்ற கேப்டன் வரும் போது எந்தவித வரவேற்பும் இன்றி சென்றது இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு பக்கம் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மறுபக்கம் பேட் கம்மின்ஸ் எந்தவித ஆரவாரமின்றி செல்கிறார். கோப்பையை வென்றதை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என இந்திய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

இந்த கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் ரசிகர்கள் அதை கொண்டாடிருப்பார்கள். கேப்டனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்திருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும் அந்த மாநிலத்தில் கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் என்பது மிகையாகாது. 

Tags:    

Similar News