null
ஏலத்தில் எடுக்காத சிஎஸ்கே: 20 சிக்ஸ்.. 13 பவுண்டரி.. அதிவேக இரட்டை சதம் விளாசிய சமீர் ரிஸ்வி
- கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
- இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 405 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமீர் ரிஸ்வி 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 97 பந்தில் 201 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சமீர் ரிஸ்வி சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக மாநிலங்களுக்கு இடையே ஆன அங்கீகரிக்கப்பட்ட லிஸ்ட் ஏ போட்டியில் நாராயணன் ஜெகதீசன் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் 114 பந்துகளில் அதிவேக இரட்டை சதத்தை அடித்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு முன்பாக முதலிடத்தில் நியூசிலாந்தின் சாரட் போவ்ஸ் இருக்கிறார். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து ஆச்சரியப்படும் இடத்தில் வாங்கியது.
ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவில் சொபிக்கவில்லை. இதனால் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. டெல்லி இவரை வெறும் 95 லட்ச ரூபாய்க்கு வாங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.