கிரிக்கெட் (Cricket)

பி.எப். மோசடி: ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்

Published On 2024-12-21 09:47 GMT   |   Update On 2024-12-21 09:47 GMT
  • ரூ.23 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
  • மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. இந்நிலையில், அவருக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடகா மாநிலத்தின் புலகேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக செஞ்சுரிஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் நிர்வாகத்தை ராபின் உத்தப்பா நடத்தி வந்தார். இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பங்களிப்பைக் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அவர்களின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை. ரூ.23 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உத்தப்பாவை பிடித்து அவரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ராபின் உத்தப்பா 2006-ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். அவர் 2006 முதல் 2015 வரை 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.94 சராசரியில் 934 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ராபின் உத்தப்பா அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் தொடரில் அவர் 130.41 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிட்டத்தட்ட 5000 ரன்களை அடித்துள்ளார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே 2012 மற்றும் 2022 இல் ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார்.

Tags:    

Similar News