ஆன்மிக களஞ்சியம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் கணபதி, சிவனுக்கு தனி சன்னதி

Published On 2024-12-17 13:00 GMT   |   Update On 2024-12-17 13:00 GMT
  • மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.
  • மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் அம்மன் குடி கொண்டிருக்கும் கருவறை அருகே இடது புறம் மாடன் தம்புரானுக்கு தனி கோவில் உள்ளது.

அதற்கு அடுத்த சுற்றில் பின்புறம் கணபதிக்கும், சிவனுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது.

இது தவிர கோவிலின் உட்பகுதியில் நாகரம்மனுக்கும் தனி கோவில் உள்ளது.

இதில் பெண்கள் மஞ்சள் தூவி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதியின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

ஆலய கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன.

மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது.

மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப்படுகிறது.

Similar News