ஆன்மிக களஞ்சியம்

கோவிலில் தமிழக, கேரள சிற்பகலை

Published On 2024-12-17 13:00 GMT   |   Update On 2024-12-17 13:00 GMT
  • நாலம்பலத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் ராஜேஸ்வரி ஸ்ரீபார்வதியோடு அமர்ந்திருக்கும் பரமசிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
  • தெற்கு கோபுரத்தில் மகேஷ்வரியின் சிற்பம் காட்சி தருகிறது.

ஆற்றுகால் பகவதி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.

இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆற்றுக்கால் தேவியை வழிபடும் பக்தர்களுக்கு கோவிலில் அமைந்துள்ள ஓவிய சிற்பங்கள் அம்மனின் அவதாரங்களை விளக்குவதாக அமைந்துள்ளது.

இவை தமிழக மற்றும் கேரள சிற்ப கலையின் மகத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இக்கோவிலில் உள்ள கோபுரங்களில் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

கோபுர முகப்பில் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

முக்கிய மண்டபத்தின் மேல் அசுரனை அளித்த தேவியின் வடிவம் வடிக்கப்பட்டு உள்ளது.

ராஜகோபுரத்தின் உள்பகுதியில் காளி தேவியின் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

இதுபோல தென்கோபுரத்தின் உள்பக்கம் வீரபத்திரர் வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

நாலம்பலத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் ராஜேஸ்வரி ஸ்ரீபார்வதியோடு அமர்ந்திருக்கும் பரமசிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

தெற்கு கோபுரத்தில் மகேஷ்வரியின் சிற்பம் காட்சி தருகிறது.

இவை ஆலயத்தின் சிற்பக்கலைக்கு மட்டுமின்றி அம்மனின் சிறப்புகள் நம் கண் முன்பு வந்து போகவும், நமக்கு பக்தி பரவசத்தை ஏற்பத்துவதாகவும் உள்ளது.

Similar News