ஆன்மிக களஞ்சியம்

சக்தி வாய்ந்த லலிதா சகஸ்ரநாம ஸ்லோகம்

Published On 2024-12-18 12:45 GMT   |   Update On 2024-12-18 12:46 GMT
  • லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம்.
  • இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம்.

இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்கி, நன்மைகளைப்பெற வைக்கும் வழிபாட்டு முறையாக பின்பற்றப்படுகின்றது.

பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும்.

ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது 'ஸ்ரீ வித்யா' எனப்படும் ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும்.

அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.

உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை 'ஸ்ரீ' என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா.

பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.

லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம்.

இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம்.

எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினையும் ஏற்றுக்கொள்கிறாள்.

Similar News