ஆன்மிக களஞ்சியம்

தேவர்கள் தெய்வங்கள் குடியிருக்கும் கோமாதாவை வழிபடுங்கள்

Published On 2024-10-29 12:00 GMT   |   Update On 2024-10-29 12:00 GMT
  • பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே.
  • மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.

இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன.

அத்தகைய காரணங்களில் முதன்மையாக இருப்பவைகளில் தனிச்சிறப்புடன் திகழ்வது பசுக்கள்.

இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது.

பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள்.

அதற்கு பதில் பசுவை, பசுத்தாய், கோமாதா என்றே அழைப்பார்கள்.

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே.

மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.

எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது.

எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் பசுத்தொழுவம் அமைத்து அன்றாடம் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசு மடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை.

அதோடு முக்கிய நாட்களில் அல்லது எல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம்.

Similar News