ஆன்மிக களஞ்சியம்

கோ பூஜை முறை

Published On 2024-10-29 12:11 GMT   |   Update On 2024-10-29 12:11 GMT
  • நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.
  • கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.

முதலில் பசுவை அழைத்து வர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும்.

பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும். பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.

நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.

கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.

108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்.

பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.

இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.

வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.

பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.

Similar News