ஆன்மிக களஞ்சியம்

குழந்தைகளுக்கு உயிர்ப்பாலாக விளங்கும் பசும்பால்

Published On 2024-10-29 12:12 GMT   |   Update On 2024-10-29 12:12 GMT
  • அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது.
  • பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.

நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும்.

அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.

பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன.

குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.

ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது.

அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.

பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை.

இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.

Similar News