ஆன்மிகம்
நாகதோஷம் அகற்றும் அகத்தீஸ்வரம் முத்தாரம்மன்
முத்தாரம்மன் ஆலய அன்னையை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் எலுமிச்சைப் பழ தீபமேற்றி, சிவப்பு அரளி மாலை சூட்டி, வழிபட்டால் நாகதோஷங்கள் விலகும்.
முத்தாரம்மன் சிவ சொரூபமாக காட்சிதருவதால், அனைத்து முத்தாரம்மன் ஆலயங்களிலும் குங்குமத்திற்குப் பதில் முதன்மை பிரசாதமாக திருநீறு அளிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் கல்யாணக் காட்சி கொடுத்த, அகத்தீஸ்வரத்தில் உள்ள முத்தாரம்மன் ஆலயம்.
இத்தல முத்தாரம்மனின் காலடியில் நாகம் உள்ளதால், அன்னையை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் எலுமிச்சைப் பழ தீபமேற்றி, சிவப்பு அரளி மாலை சூட்டி, 8 உதிரி எலுமிச்சைப் பழங்கள் வைத்து வழிபட்டால் நாகதோஷங்கள் விலகும். முத்தாரம்மனின் கடைக்கண் பார்வையில் இங்கு நவக்கிரக சன்னிதிகள் உள்ளது சிறப்பு. நவக்கிரக நாயகியாக முத்தாரம்மன் இங்கு அருள்கிறார். எனவே இங்கு அன்னையை முறைப்படி வழிபட்டால் கிரக தோஷங்களும் அகலுமாம். கண்பார்வை குறையுடையோர் அம்பிகைக்கு வெள்ளியில் கண் மலர் சாற்றி வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் நகரத்திற்கு அடுத்து கொட்டாரம் எனும் ஊர் வரும். அங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகத்தீஸ் வரம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.