ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படி நடைபெறுவது மரபு.
கேரள பஞ்சாங்கப்படியும், தமிழ் பஞ்சாங்கப்படியும் தமிழ் புத்தாண்டு மற்றும் கேரள புத்தாண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பிறந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சித்திரை விசு மற்றும் கனி காணும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சியையொட்டி மூலஸ்தானமான தாணுமாலயசாமி சன்னதியின் எதிரே உள்ள செண்பகராமன் மண்டபத்தில், சிவனின் முழு உருவ படம் பெரிய அளவில் காய் மற்றும் கனிகளால் வண்ணம் தீட்டப்பட்டு, அதனை சுற்றிலும் அனைத்து விதமாக காய்-கனிகள் படைக்கப்பட்டு, பெரிய அளவில் நிலைக்கண்ணாடி வைத்து அதில் தங்க நகைகள் அணிவிக்கப்பட்டிருந்தது.
மூலவராகிய தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு கோடிக்கணக்கான மதிப்பில் உள்ள தங்க குடங்கள், பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே சுசீந்திரத்திற்கு வருகை தந்தனர். இந்த கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும், கை நீட்டமாக காசு மற்றும் காய்-கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டு மற்றும் கேரள புத்தாண்டையையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பு வழிபாடாக காலை மற்றும் மாலை வேளைகளில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் இருக்கும் படி அமரச்செய்து, 4 ரதவீதிகள் வழியே ஊர்வலமாக உலா வந்தனர்.