ஆன்மிகம்
பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக பூப்பல்லக்கு திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக பூப்பல்லக்கு திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை தர்மராஜன்கோட்டை கோம்பைகரடு அடிவார மலைமீது உள்ளது பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி திருக்கோவில். இங்கு 96-வது வைகாசி விசாக பூப்பல்லக்கு திருவிழா வரும் 7-ந்தேதி (சனிக்கிழமை) கார்த்திகை நட்சத்திரத்தில் காலை 7.31க்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பாலாபிஷேகம் வருகிற 21-ந்தேதி வைகாசி விசாகத்தன்று நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள மவுனகுருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கியவாறு பாதயாத்திரையாக கோவிலை அடைகின்றனா. அங்கு பாலதண்டாயுதபாணி சாமிக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டுப்பல்லாக்கில் சாமி எழுந்தருளி, கோவிலிருந்து புறப்பட்டு கள்ளர் மடம் வந்து சேருகிறார். மறுநாள் வல்லபகணபதி திருக்கோவில் வளாகத்தில் வண்ணமலர்களால் அலங்காரிக்கப்பட்ட மின்விளக்கு தோரணங்களுடன் கூடிய பூப்பல்லாக்கில் பாலதண்டாயுதபாணி அலங்காரத்துடன் புறப்பட்டு வாடிப்பட்டி நகரின் முக்கியவீதிகளில் உலா வருகிறார். அப்போது பக்தர்களால் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டபகப்படிகளில் எழுந்தருளி, தாதம்பட்டி, நீரேத்தான், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக விடிய விடிய வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தொடர்ந்து 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு பூப்பல்லக்குடன் சாமி கோவிலை சென்று அடைகிறார். ஏற்பாடுகளை சொக்கையாசுவாமி வகையறாக்கள், தாங்கிகள், கிராமப்பொதுமக்கள் செய்து வருகின்றனர். சுகாதாரப்பணி ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீசாரும் செய்து வருகின்றனர்.