ஆன்மிகம்

பெற்றோர் இல்லாதவர்கள் தான் பசுவிற்கு அகத்திக்கீரை தர வேண்டுமா?

Published On 2016-05-11 11:53 IST   |   Update On 2016-05-11 11:53:00 IST
பெற்றோர் இல்லாதவர்கள் தான் பசுவிற்கு அகத்திக்கீரை தர வேண்டும் என்ற தவறாக தகவல் மக்களிடையே உள்ளது.
பெற்றோர் இல்லாதவர்கள் தான் பசுவிற்கு அகத்திக்கீரை தர வேண்டும் என்ற தவறாக தகவல் மக்களிடையே உள்ளது. முற்றிலும் தவறான கருத்து. யார் வேண்டுமானாலும் பசுவிற்கு அகத்திக்கீரை தரலாம். ஒரு ஜீவனுக்கு உணவிடுவதில் என்ன பாகுபாடு? அகத்திக்கீரை என்பது முன்னோர்களுக்கு மட்டும்தான் உகந்ததா என்ன? அரிசியை சாதமாக சமைத்து முன்னோர்களின் நினைவாக காகத்திற்கு வைக்கிறோம் என்பதால் சாதம் என்பது முன்னோர்களுக்கான உணவாக மட்டும் ஆகிவிடுமா?

பசுமாடு மிகவும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் அகத்திக்கீரையும் ஒன்று. பசுவிற்கு மிகவும் விருப்பமான அகத்திக்கீரையை யார் வேண்டுமானாலும் தரலாம். தாய், தந்தை இல்லாதவர்கள் மட்டும்தான் அகத்திக்கீரையை தர வேண்டும் என்பது முழுக்க முழுக்க மூட நம்பிக்கையால் உண்டான கருத்து.

Similar News