ஆன்மிகம்

தவுட்டுபாளையம் மாரியம்மன் கோவிலில் 2 நாட்கள் ஸ்ரீஜெயசண்டிகா யாகம்

Published On 2016-08-10 13:25 IST   |   Update On 2016-08-10 13:25:00 IST
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ ஜெயசண்டிகா மகா யாகம் மற்றும் 1008 பால் குட அபிஷேகம் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ ஜெயசண்டிகா மகா யாகம் மற்றும் 1008 பால் குட அபிஷேகம் நடைபெறுகிறது. பால்குட அபிஷேகத்தை முன்னிட்டு நாளை 11-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் மங்கள மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் 9 மணிக்கு மேல் தேவி மஹாத்மிய பாராயணமும், 10 மணிக்கு மாலை 7-மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு. தீப வழிபாடு புண்யாகம், பஞ்சகவ்விய பூஜை, வாஸ்து சாந்தி, சண்டிகலசஸ்தாபனம், மூல மந்திர பாராயணம், சம்புடி ஹரண அக்னி ஆவாஹனம், மூல மந்திர யாக வேள்வி, மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7-மணிக்கு யோகினி பௌரவ பூஜையும் நடைபெறுகிறது.

12-ம் தேதி வெள்ளிகிழமை காலை 10-மணிக்கு மேல் 1008 பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது. பால் குட அபிஷேகத்தை முன்னிட்டு சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி பால் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் பால்குடங்களுடன் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பாலின் மூலம் பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள்பெறுகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. மாலை 5 மணிக்கு மேல் மகா மாரியம்மன் ஊஞ்சல் உற்சவமும் மற்றும் பூச்செரிதல் விழாவும் நடைபெறுகிறது.

Similar News