ஆன்மிகம்

திருக்காஞ்சி கோவிலில் அகத்தியருக்கு மகா குருபூஜை

Published On 2016-12-19 09:47 IST   |   Update On 2016-12-19 09:47:00 IST
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் நேற்று அகத்தியருக்கு மகா குருபூஜை நடைபெற்றது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் அகத்தியரால் பூஜை செய்யப்பட்டதாகும். எனவே இந்த கோவிலில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் மகா குருபூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்பேரில் நேற்று அகத்தியருக்கு மகா குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி அகத்தியருக்கும், லோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பகல் 12 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குருபூஜையில் புதுவை மற்றும் தமிழக பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அகத்தியரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News