ஆன்மிகம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோபுரங்கள், தளவரிசைகள் பழுது பார்க்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 24-ந்தேதி அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
இதனையடுத்து 25-ந்தேதி நவக்கிரக ஹோமமும், 27-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கி, நேற்று முன்தினம் வரை 7-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் விழாவையொட்டி மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் 101 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சோமஸ்கந்தர் யாகம், பரிவாரயாகம், விநாயகர் யாகம், பைரவர் யாகம் உள்ளிட்ட பல யாகங்கள் வளர்க்கப்பட்டு 275 சிவாச்சாரியர்களால் வேதபாராயணம், மறையொலி முழங்க தினமும் யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, காலை 8 மணிக்கு மகாபூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் யாகவேள்வி, திருக்குடங்களுடன் கடப்புறப்பாடு நடைபெற்று, கோபுரம் சென்றடைந்தனர். அங்கு கோபுர கலசத்திற்கு அருகம்புல் மாலை சுற்றப்பட்டு, வேதவிற்பன்னர் மறையொலி முழங்க பச்சைக்கொடி அசைக்கப்பட்டு 9.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கோவில் முன்பு கூடியிருந்த பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவரான விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.