ஆன்மிகம்

சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகப்பெருமான்

Published On 2017-08-09 11:29 IST   |   Update On 2017-08-09 11:29:00 IST
தேனி மாவட்டம் தெப்பம்பட்டி என்ற இடத்தில் மாவூற்று வேலப்பர் கோவிலில் முருகப்பெருமான் சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
தேனி மாவட்டம் தெப்பம்பட்டி என்ற இடத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் உள்ளது. இத்தல முருகப்பெருமான் சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். குகைகள் நிரம்பிய இந்த மலைப் பகுதியில் சித்தர்கள், யோகிகள் பலரும் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஒரு காலத்தில் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இந்த இடம் இருந்துள்ளது. இத்தல இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படுகிறது. இங்குள்ள மாமரம் ஒன்றில் இருந்து நீரூற்று வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இப்பகுதிக்கு ‘மாவூற்று’ என்ற பெயரும் உண்டு.

இத்தல முருகப்பெருமானும், ‘மாவூற்று வேலப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். எந்த காலகட்டத்திலும் இந்த நீரூற்று வற்றியதில்லை என்பதே இத்தலத்தில் அதிசய சிறப்பு.

Similar News